மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகனூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் கரிக்காம்பட்டு கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமியின் மீது மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முனுசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.