விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
Here is the Lyric Video of #SlumAnthem 3rd track from #KodiyilOruvan 😉
Enjoy nanba 😉https://t.co/GIivQbe20z@akananda @im_aathmika @menongautham #DrumsSivamani @Premgiamaren @nivaskprasanna @nsuthay @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/7DU5A5rmTJ— vijayantony (@vijayantony) June 28, 2021
மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த ஸ்லம் ஆன்த்தம் பாடலை விஜய் ஆண்டணி, இயக்குனர் கௌதம் மேனன், பிரேம்ஜி, நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .