கடன் தொகை செலுத்திய விவகாரத்தில் இருவர் இணைந்து மூன்று பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 2016 – ஆம் ஆண்டு கிருஷ்ணன் துபாயில் வேலை செய்தபோது சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்பவரிடம் 1 ½ லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்த கடன் பணத்தை சித்தலூரில் இருக்கும் தனது தம்பியான சிவகுருநாதன் என்பவருக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு அழகர்சாமி அந்த கடன் பணத்தை சித்தூரில் இருக்கும் தனது தம்பியான சிவகுருநாதன் என்பவருக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதன்படி மாதம்தோறும் தான் கொடுக்க வேண்டிய கடன் தொகையை கிருஷ்ணன் சிவகுருநாதனுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிருஷ்ணன் துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு சில நாட்களில் சிவகுருநாதன் பணத்தை கொடுக்குமாறு கிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து தான் வாங்கிய கடன் தொகை அனைத்தையும் கொடுத்து விட்டேன் என கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிவகுருநாதன் தனது நண்பருடன் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு கைகலப்பாக மாறி ஏழுமலை அவரின் மனைவியான லிங்கம் முத்து மற்றும் மருமகளான காசிமுத்து போன்றோரை சிவகுருநாதன் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த சிவகுருநாதன் மற்றும் அவருடன் இருந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.