Categories
மாநில செய்திகள்

பாஜக, அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்… கே.எஸ். அழகிரி கருத்து..!!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவை மக்கள் எப்பொழுதும் அனுப்ப மாட்டார்கள் என்ற கே எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு முதன் முதலாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பிருந்து திமுகவும் காங்கிரஸ் கட்சியினரும் நீட் தேர்வு வரக்கூடாது என மிக உறுதியாக இருந்தனர். மேலும் 2014இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு  திணிக்கப்படவில்லை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்த நீட் தேர்வு மூலமாக பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜகதான். நீட் தேர்வு திணிப்பின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்த பாஜக அதிமுகவை என்றென்றும் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முயன்ற முயற்சியை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |