தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக தமிழிசை வந்துள்ளார்.
அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். முன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் அளித்தபேட்டியில்,”தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன். நான் இதனை மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.