Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘சபாபதி’ ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம் . தற்போது இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இதில் சபாபதி படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கியுள்ளார் .

 

 

Santhanam's next with A1 director goes on floors- Cinema express

மேலும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சபாபதி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |