Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மருத்துவமனைகளில் அனுமதி ரத்து…. அமைச்சர் அதிரடி….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்தியதாக புகார் எழுந்த நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |