தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், எம்.டி.கணேசமூர்த்தி சென்னை பெருநகர காவல் தலைமை ஐஜியாகவும், டி.பி சுரேஷ்குமார் திருநெல்வேலி நகர காவல் சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.