ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருவதால், முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெயினில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது வரை சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நாட்டில் வெகுவாக கொரனோ பரவல் குறைந்துவிட்டது.
எனவே ஸ்பெயின் அரசு விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பல மக்கள் முகக்கவசத்துடனே வெளியில் செல்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.