Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் ‘3:33’… மிரட்டலான அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது .

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ போன்ற சூப்பர் ஹிட் ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

SANDY (@iamSandy_Off) | Twitter

தற்போது இவர் 3:33 என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், பிக்பாஸ் பிரபலங்கள் சரவணன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘3:33’ படத்தின் டீசர் இன்று மதியம் 3:33 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது . இந்த டீசருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ‌

Categories

Tech |