Categories
உலக செய்திகள்

லாரி டிரைவர்களின் பற்றாக்குறை…. உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு…. எச்சரிக்கும் உணவுத்துறை நிபுணர்கள்…!!!

ஒரு லட்சத்துக்கும் அதிகமான லாரி டிரைவர்களின் பற்றாக்குறையால் விரைவில் உணவுத்  தட்டுப்பாடு ஏற்படும் என்று பிரிட்டன் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

பிரெக்சிட் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இரட்டை தாக்கத்தால் குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களை  விநியோகிப்பதில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து  உணவுத்துறை அதிகாரிகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள டிரைவர்களை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒருவேளை அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு முடிவு எடுக்காவிட்டால் பிரிட்டனில் உணவு பொருட்கள் விநியோகத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும் என்றும்,அங்கு சுமார் 85,000 முதல் 100,000 லாரி டிரைவரகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல்பொருள் அங்காடிகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர் .

 

Categories

Tech |