Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மாநிலத்தில் என்கவுண்ட்டர்… லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சரண்…!!!

காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கியை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்று நடைபெற்ற தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இன்றும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இருப்பினும் மீதமுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |