மீனம் ராசி அன்பர்களே.! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிரச்சனைகள் நல்லபடியாக முடியும். கொடுத்த கடன் திருப்திகரமாக வசூலாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பேசி எடுக்கும் காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும். திட்டங்கள் அனைத்துமே செயல்படும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை சரி செய்து விட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கண்டிப்பாக ஒரு தெளிவான முடிவை எடுப்பீர்கள். பயணங்கள் சாதகமாக அமையும். நல்லவரின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் மீது அன்பு கொள்வீர்கள்.
கடன் வாங்கி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் சிக்கல்கள் ஏற்பட்டாலும் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் சில விஷயங்களில் கவன சிதறல்கள் இருக்கும். காதலில் முறிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் நாட்டம் இருக்க வேண்டும். கல்வியில் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் இருக்கின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்