பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மாட் ஹான்காக்கின் உதவியாளரான, Gina Coladangelo என்பவர் மூன்று குழந்தைகளின் தாய் ஆவார். மேலும், மாட் ஹான்காக், 15 வருடங்களாக தன் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கு துரோகம் செய்து உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்திருப்பது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தன் மனைவியை பற்றி கவலைப்படாமல், வேறு கருத்தை வெளியிட்டுள்ளார். சமூக இடைவெளி விதியை மீறி விட்டேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். மக்கள் எதிர்பார்ப்பை நான் செய்யவில்லை. அவர்களை ஏமாற்றியதற்காக வருத்தமடைகிறேன். கொரோனா பரவலில் இருந்து நாட்டை மீட்கும் பணியில் தான் கவனம் வைத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.