Categories
தேசிய செய்திகள்

கோடாரியால் வெட்டி, பாகங்களை தீயில் கருக்கி… கட்டின மனைவியை இப்படியா செய்றது… மிகவும் கொடூரமான சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை தீயில் கருகி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சாரிப் என்ற நபர் கரூர் பக்ரா என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சாரிப் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் அவரின் மூத்த மகள் தந்தைக்கு தெரியாமல் பொருள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு நாள் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரத்தில் கணவன் மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை கோடாரியால் வெட்டி அதன் பாகங்களை தீயிட்டு பின்னர் அங்கிருக்கும் கால்வாயில் வீசி சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து தனது மூன்று குழந்தைகளும் அம்மா எங்கே என்று கேட்டபோது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் தாய் வீட்டிற்கு சென்று உள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த தினத்தன்று சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் என்னவென்று கேட்டபோது இது கணவன் மனைவிக்கு இடையே உள்ள தகராறு நீங்கள் தலையிட வேண்டாம் எனக்கூறி அவரது கணவன் திட்டி அனுப்பியுள்ளார்.

பின்னர் அவர்கள் சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறையினர் கணவன் இந்த கொடூர சம்பவத்தை செய்து உள்ளார் என்பதை அறிந்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |