Categories
உலக செய்திகள்

“சிறுநீரகத்தை வெளியில் எடுத்து மீண்டும் வைத்தனர்!”.. 11 மணி நேர அறுவை சிகிச்சை.. அசத்திய மருத்துவர்கள்..!!

ஐக்கிய அரபு நாட்டில் ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த நபருக்கு, புற்றுநோய் கட்டி உருவானதால் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் அதனை அகற்றியுள்ளனர். 

ஐக்கிய அரபு நாட்டில் வசிக்கும் அலி ஷம்சி என்ற 60 வயது நபருக்கு பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் தான் இருந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி உருவானது. எனவே என்ன செய்வது? என்று மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியிருக்கும் சிறுநீரகத்தை எடுத்துவிட்டனர்.

அதனை உடல் உறுப்புகள் பாதுகாக்க பயன்படுத்தப்படும் திரவத்தில் மருத்துவ நிபுணர்கள் வைத்து விட்டனர். இதனையடுத்து சிறுநீரகத்தில் இருந்த கட்டியை பிற செல்களுக்கு பாதிப்பின்றி சிறப்பாக நீக்கிவிட்டனர். கட்டி நீக்கப்பட்ட இடத்தில் தையல் போட்டு மீண்டும் அந்த சிறுநீரத்தை, அது இருந்த இடத்திலேயே பொருத்திவிட்டனர்.

இது பற்றி மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, அலி ஷம்சியின் சிறுநீரகத்தில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்தின் ஒரு பகுதியை அகற்றிவிட்டோம். எனினும் அவருக்கு  உடல் நலம் சரியில்லை. எனவே அவரின் சிறுநீரகத்தை வெளியில் எடுத்து கட்டியை நீக்கிவிட்டு மீண்டும் பொருத்துவதற்கு தீர்மானித்தோம் என்று கூறியுள்ளார்கள்.

அதாவது அவரின் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து அதில் உள்ள கட்டியை நீக்கிவிட்டு மீண்டும் தையல் போட்டு முதலில் இருந்தபடியே பொருத்துகின்ற இந்த மிகப்பெரிய அறுவை சிகிச்சையானது, சுமார் 11 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டு நல்லபடியாக முடிந்துள்ளது. இது போன்ற பெரிய அறுவை சிகிச்சை அரபு நாடுகளில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |