Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க…. இதை செய்தால் போதும்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்வதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழும் வைத்திருப்பது அவசியம்.

இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதனபடி வெளிநாடு செல்வோர் முதலில்  selfregistration.cowin.gov.in என்ற இணையதளத்தில் சென்று செல்போன், OTP எண் அளித்த பிறகு வலது பக்கத்தில் காணப்படும் raise an issue – வை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் add passport details -ல் தங்களது பாஸ்போர்ட் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |