மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களுள் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது த்ரில்லர் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . “அவள்” படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ள இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அதில் பிரபல ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நயன்தாரா சூப்பர் ஸ்டாருடன் தர்பார் திரைப்படத்தில் இணைந்து நடித்துவந்தது குறிப்பிடத்தக்கது.