விவசாயி வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் வெளியே செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் திரும்பி வந்த ராஜேந்திரன் தனது வீட்டு கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் பதற்றத்துடன் வீட்டிற்குள் நுழைந்த ராஜேந்திரன் பீரோவில் 20 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜேந்திரன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகிய தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.