சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இளைஞர் 5 மாநில காவல்துறையினரை திணற செய்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள St. Gallen என்ற மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 5 மாநிலங்களில் 60 திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடத்தில் தொடர்ந்து பல மாதங்களாகவும், 2020 ஆம் வருடத்தின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் திருட்டு சம்பவங்களை செய்துள்ளார்.
இதில் உயர்ரக மிதிவண்டிகள், வாகனங்களின் டயர்கள் போன்றவற்றை மட்டும் திருடிச் சென்று, அவற்றை உடனடியாக செர்பியாவில் விற்று பணமாக்கி விடுவாராம். தற்போது இவர் திருடிய பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 3,55,000 பிராங்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Appenzell Ausserrhoden, St. Gallen, Graubünden, Thurgau, Glarus, Appenzell Innerrhoden போன்ற மாநிலங்களில் திருடியிருந்திருக்கிறார்.
St. Gallen மாநிலத்தின் காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.