Categories
உலக செய்திகள்

இலங்கை கடலில் பயணித்த சரக்கு கப்பலில் தீ விபத்து.. கடற்படை வெளியிட்ட தகவல்..!!

இலங்கை கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், சரக்கு கப்பலான MSC Messina, நேற்று முன் தினம், சிங்கப்பூருக்கு செல்ல கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது Great Basses Reef என்ற கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 480 மைல் தூரத்தில் பயணித்த போது திடீரென்று கப்பலில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் கப்பலின் எஞ்சின் அறைக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு கப்பலானது, சுமார் 4,743 கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் திறனுடையது என்று கடற்படை தெரிவித்துள்ளது. இக்கப்பலில் பயணித்த 28 பேரில் ஒருவர் மாயமானதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய கடற்படையிலிருந்து, கப்பலும், விமானமும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |