பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விஜய் பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் . இந்நிலையில் இன்று #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
Very cool https://t.co/bFjbEgmeij
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021
அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு ‘தளபதி விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள்’ என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் ஷாருகான் ‘வெரி கூல்’ என கூறியுள்ளார். தற்போது நடிகர் ஷாருக்கானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.