Categories
உலக செய்திகள்

ராணாவை நாடு கடத்தும் வழக்கு.. அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க மக்கள் 6 பேர் உட்பட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவர் அமெரிக்க அரசால் அங்கு கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது நண்பரான தஹாவுர் ராணா என்பவரும் இத்தாக்குதலில் தொடர்புடையவர். எனவே இந்திய அரசின் கோரிக்கை படி அமெரிக்க அரசு அவரை கைது செய்தது.

மேலும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக் கொண்ட சமயத்தில் ராணா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்தியாவின் ஆவணங்களை அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

Categories

Tech |