தமிழகத்திலுள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது.
இதை தொடர்ந்து நடப்புகள் கல்வியாண்டு 2020 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதன்படி, மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர tngptc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 52 இடங்களில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11ஆம் வகுப்பில் சேருவதற்கான என்ன தகுதியோ, அதே அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.