Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியின் வங்கி கணக்கை வைத்து… இருவர் செய்த செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனைவியின் வங்கி கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் மற்றும் அவரின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் சரவணன் – ரேவதி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார். இவரின் மனைவியான ரேவதி அப்பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் சேமித்து வைப்பதற்காக எந்திரம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் எந்திரத்தில் சேமிப்பு தொகையை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர்.

அப்போது சேமிப்புக் கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் எந்திரத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதன் பிறகு 2 – நபர்கள் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை சேமிப்பு கணக்கில் செலுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளரான ராதாகிருஷ்ணன் என்பவர் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வங்கியில் உள்ள எந்திரத்தில் சரவணன் மற்றும் அவரின் நண்பரான ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து ரேவதியின் வங்கி கணக்கில் இந்த கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இந்த வழக்கை பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |