Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் இணையும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா… வெளியான சூப்பர் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் .

Breaking : Nayanthara to pair opposite with Shah Rukh Khan!!!! - Fans  Express

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, பிகில் ஆகிய படங்களில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |