Categories
உலக செய்திகள்

போலி ஆதார் கார்டு மூலம் சிக்கிட்டாங்க …. சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை …!!!

போலி ஆதார் கார்டு மூலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்காளதேச நாட்டில் இருந்து  பலரும் இந்தியாவில் மேற்கு வங்காளம் வழியாக சட்ட விரோதமாக நுழைந்து  போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் தங்குவதுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்தவர்களை  போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிமுல் காஸி , மன்னன் மோல்லல் மற்றும்  சைஃபுல் இஸ்லாம் ஆகிய 3 பேரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் உரிய ஆவண ஏதுமில்லாமல் இருந்ததும்  மத்திய உளவுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அனுப்பார்பாளையம் போலீசாரின் உதவியுடன் சட்டவிரோதமாக தங்கி வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம்  நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெவ்வேறு பனியன் கம்பனி நிறுவனங்களில் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதில் ஷிமுல் காஸி என்பவர் 2 வருடங்களாகவும், மன்னன் மோல்லல், சைஃபுல் இஸ்லாம் இருவரும்  5 வருடங்களாகவும் திருப்பூரில் தங்கியிருந்தது  தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 போலி ஆதார் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .

Categories

Tech |