தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமன்றி அரசுக்கு சொந்தமான பல்வேறு கோவில் நிலங்களையும் மீட்டு வருகிறது. இந்நிலையில் குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.