விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .
பிலிப்பைன்சில் விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 3 விமானிகளுடன் 3 பேர் இணைந்து கப்பாஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மணிலா நகரில் வடக்கே பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் ஹெலிகாப்டர் பயிற்சி முடிந்ததும் விமான தளத்திற்கு வராததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் விமானம் விபத்துக்குள்ளானது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து பிலிப்பைன்ஸ் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில், இந்த விமான பயிற்சியின்போது ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. மேலும் குடும்ப உறுப்பினர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து தகவல் வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.