கும்பம் ராசி அன்பர்களே.! தைரியம் கூடும்.
இன்று சிறிய வேலை ஒன்று அதிகமான சுமையை ஏற்படுத்தி விடும். சின்ன வேலை கூட கண்டிப்பாக இழுத்துக் கொண்டே இருக்கும். அதனால் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதில் நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுத்து வாங்க வேண்டாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகும். தீவிர முயற்சி எடுத்து ஒரு காரியத்தில் ஈடுபட்டது இப்போது நன்மையை கொடுக்கும். தேவையான அளவு பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் சரியாகும். மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தைரியம் கூடும். மனதிற்குள் தன்னம்பிக்கை ஏற்படும். கணவன்-மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வார்த்தைகளில் தெளிவு வேண்டும்.
வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை பெற வேண்டும். சில நேரங்களில் அவர்கள் உங்களை தொந்தரவு செய்தாலும் முன்கோபங்கள் காட்டாமல் நடந்துகொள்ளவேண்டும். காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். காதல் வெற்றியை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய அணுகுமுறை வெளிப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு