Categories
சினிமா தமிழ் சினிமா

புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி… வைரலாகும் புகைப்படம்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை விஜய்சேதுபதி நிறைவேற்றியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு மக்கள் செல்வன் என்று பட்டம் வழங்கப்பட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் விஜய்சேதுபதியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் மூலம் இவரின் நடிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அந்த சிறுவன் தனது தாய் தந்தையுடன் தனது ஆசையை தெரிவித்துள்ளார். இதை அறிந்த விஜய் சேதுபதி சிறுவனை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவருடன் கலகலப்பாகப் பேசி அவரை உற்சாகப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |