வருமான வரி செலுத்துவோருக்கு கால அளவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து நீடித்து வருகின்றது.
ஏற்கனவே தனிநபர் வரி செலுத்த ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து இருந்த நிலையில், தற்போது அதனை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதைத்தொடர்ந்து நிறுவனங்கள் வரி செலுத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருந்த நிலையில் தற்போது நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.