Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

24 குண்டுகள் முழங்க… அடக்கம் செய்யப்பட்ட மோப்ப நாய்… காவல்துறையினரின் மரியாதை…!!

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த மோப்பநாய் காவிரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் கொலை, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் காவலர்களுக்கு துப்பு கண்டுபிடித்து குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவியாக இருக்கும். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் காவிரி என்ற மோப்ப நாய் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்த நாய் பொது மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து  இந்த நாய் வெடிகுண்டு கண்டறிதலிலும், துப்பறியும் பணியிலும் நன்கு பயிற்சி பெற்றதாகும். இந்நிலையில் காவிரிக்கு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனை அடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உயிரிழந்த மோப்பநாயின் உடலுக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்  அதன் உடலானது 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |