Categories
தேசிய செய்திகள்

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்… உயர்நீதிமன்றம் கேள்வி..!!!

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு கொரோனா பரவலை கையாண்டது தொடர்பான வழக்கு  அம்மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் அமித் நெகி கொரோனா கையாண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. டெல்டா ப்ளஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, இனியும் எங்களை முட்டாள் ஆக்க வேண்டாம். குழந்தைகளை காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என்று தலைமை நீதிபதி ராம் ரையா கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |