நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு ஒன்றில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் ஒன்றை அளித்திருந்தார் .
இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் சென்னையில் மூன்
லைட் ரெஸ்டாரன்ட் என்ற பிரபல உணவகத்தில் இதனை ஆர்டர் செய்தேன். ஆனால் இதில் கரப்பான்பூச்சி இருந்தது. இது முதல் தடவை கிடையாது. இரண்டாவது தடவை. எனவே இந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த உணவகம் செயல்பட தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.