நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
Working on the second song 🙂 can't wait for you guys to hear it! https://t.co/K2ALUjRDzw
— Raja yuvan (@thisisysr) June 23, 2021
இயக்குனர் செல்வராகவன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது’ என அறிவித்திருந்தார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . அதில் ‘இரண்டாவது பாடலின் பணிகள் நடைபெற்று வருகிறது . நீங்கள் அதைக் கேட்பதற்காக காத்திருக்க முடியாது’ என பதிவிட்டுள்ளார்.