Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நாட்கள் எங்க போன…? பார்த்ததும் கதறிய குழந்தைகள்… கோவையில் நடந்த கொடூரம்…!!

கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திமாநகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார். மேலும் கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் இவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கவிதா எப்போதும் செல்போனில் பேசி கொண்டிருப்பதால் குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த குமார் தனது மனைவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கவிதா தனது தோழியுடன் தங்கியிருந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குமார் இவ்வளவு நாட்கள் எங்கே சென்றாய் எனவும், குழந்தைகள் குறித்து உனக்கு கவலை இல்லையா எனவும் கேட்ட போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த குமார் தனது வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து கவிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

அதன்பின் அம்மா இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் குமார் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கவிதாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை அடித்து கொலை செய்த குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |