Categories
உலக செய்திகள்

தவறான செய்திகளை பரப்புறாங்க..! பிரபல நாட்டின் இணையதளம் முடக்கம்… அமெரிக்கா அதிரடி..!!

அமெரிக்கா தவறான செய்திகளை பரப்பியதாக கூறி ஈரான் நாட்டின் செய்தி இணைய தளங்களை முடக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாடு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ஸ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது தான் இந்த ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததால் பொருளாதாரத்தில் ஈரான் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பகை ஏற்பட்டது. தற்போது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகும் கூட அந்த பகையானது இருநாடுகளுக்கு இடையே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தவறான செய்திகளை பரப்பியதாக கூறி அமெரிக்கா ஈரான் நாட்டின் செய்தி இணைய தளங்களை முடக்கியுள்ளது.

மேலும் வர்த்தகத்துறை மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ-ன் முத்திரைகளும் ஈரான் இணையதளங்கள் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கையில் பதிக்கப்பட்டுள்ளது. ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.க்கும் ஈரான் அரசுக்கு சொந்தமான டி.வி.க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் சர்வதேச அரசியல் அரங்கில் இந்த திடீர் நடவடிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அரசின் நிதித்துறை ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கட்டைப் ஹிஸ்புல்லா இணையதளங்களும், டெலிவிஷன் யூனியன் மற்றும் ஈரான் இஸ்லாமிய ரேடியோ நடத்தி வந்த 33 இணையதளங்களையும் அமெரிக்கா அதிரடியாக கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் டெலிவிஷன் யூனியன் மற்றும் ஈரான் இஸ்லாமிய ரேடியோ பயன்படுத்தும் களங்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும், அதற்கான எந்த உரிமமும் டெலிவிஷன் யூனியன் மற்றும் ஈரான் இஸ்லாமிய ரேடியோ அமெரிக்க கருவூலத்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாடு அலுவலகத்திலிருந்து பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு கட்டை ஹிஸ்புல்லா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைப்பிற்கு எந்த ஒரு உரிமமும் இல்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் முதல் அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் தரப்பிலிருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Categories

Tech |