இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது.
இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆம்போடெரிசின் பி மருந்து கூடுதலாக 61 ஆயிரத்து 120 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 7.9 லட்சம் ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகள் வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.