Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் போன் எடுக்கல… சந்தேகமடைந்த உறவினர்கள்… வீட்டிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்துசென்றதினால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார்(45),அவருடைய மனைவி பிரீத்தி(35), இவர்களுடைய மகன் ஆசிஸ் ராகவேந்திரா(13) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிபோன நிலையில் ஆத்திரமடைந்த பிரீத்தி அவரது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று ராகவேந்திரா தொலைபேசியில் விஜயகுமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

இந்நிலையில் வெகு நேரமாகியும் விஜயகுமார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது விஜயகுமார் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |