உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாண கழிவிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம், மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், அவரது வீட்டின் கீழ் தொட்டில் ஒன்றை கட்டி அதில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் ராஜேந்திரனும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கூலி தொழிலாளி ஒருவரும் அந்தத் தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி அவர்கள் 4 பேரும் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனின் மனைவி காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.