ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறைக்கு சில குறிப்புகள்:
பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும்.
சாமிக்கு அகல் விளக்கு குத்து விளக்கு ஏற்றும் போது எண்ணெயில் சிறிது கல் உப்பு போட்டால் விளக்கு நன்றாக சுடர்விட்டு பிரகாசமாக எரியும்.
பூஜை அறையில் இருக்கும் அதிக நேரம் எரிய ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து ஏற்றுங்கள்.
இரண்டு அமாவாசை, பவுர்ணமி ஒரே தமிழ் மாதத்தில் வந்தால் அந்த மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
சிவன், முருகன், சூரியனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.
சரஸ்வதி பற்றி குமரகுருபரர் பாடிய நுால் சகலகலாவல்லி மாலை.
நம் நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதிக்கு நாமகள் என்று பெயர் உள்ளது.
பூஜையின் போது கற்பூரம் எரிந்தபின் தானாக அணையவிடுவது நல்லது.
தீபாராதனையின் போது கண்களைத் திறந்தபடியே வழிபட வேண்டும்.