மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலிருக்கும் கொலராடோ மாகாணத்திலுள்ள நூலகத்திற்கு அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மர்ம நபர் காவல்துறை அதிகாரியையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை பார்த்த பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளார்கள். அப்போது அந்த மர்ம நபர் பொதுமக்களை குறிவைத்தும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவ்வாறு பொதுமக்களை நோக்கி சுட்டதில் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு ஒருவர் மீது பாய்ந்தத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
இதற்கிடையே இந்தத் துப்பாக்கி சூடு குறித்த சம்பவத்தை எவரோ ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கியின் முனையில் மர்ம நபரை சுற்றி வளைத்துள்ளார்கள். ஆனால் அந்த மர்ம நபர் தன்னை சுற்றி வளைத்த காவல்துறை அதிகாரிகளையும் சுடுவதற்கு முயன்றுள்ளார். இதனையடுத்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுட்டு கொன்றுள்ளார்கள்.