தங்கள் நாட்டிலிருக்கும் ராணுவ தளங்களை அமெரிக்க படை வீரர்கள் பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டினுடைய படைவீரர்களை பாகிஸ்தானிலிருக்கும் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்து கொண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டின் ராணுவம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டினுடைய பிரதமரான இம்ரான்கான் ஒரு அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது அமெரிக்க வீரர்கள் தங்களுடைய நாட்டிலிருக்கும் இராணுவ தளங்களை பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தானின் பிரதமர் கூறியதாவது, தங்களுடைய நாட்டின் ராணுவ தளங்களை அமெரிக்க வீரர்கள் பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டால், மீண்டும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் நாட்டை பழிவாங்குவதற்காக இலக்கு வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.