காதல் தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாதையன் குட்டை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூனாட்சி பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் என்பவரும் உறவினர் ஆவர். இந்நிலையில் சதீஷ்குமாரின் சகோதரியை அமிர்தன் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சதீஷ்குமார் அமிர்தனிடம் இது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபம் அடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமிர்தனை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் அமிர்தனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மருத்துவமனையில் அமிர்தனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சதீஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.