அனைத்து விதமான பணியிடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத வகையில் பாகுபாடு காட்டப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது அனைத்து பணி இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத வகையில் கண்டிப்பாக பாகுபாடு காட்டப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை ரஷ்ய நாட்டின் செய்தி தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.