Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரிபட்டு வராது…ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை… !!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழில் சங்கத்தினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டமானது ஊராட்சி ஒன்றிய செயலாளரான சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க நகர பொருளாளர் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து மன்னார்குடி பகுதியில் தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் கே.மணியின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளா், விவசாயிகள் சங்க நகர செயலாளா், நகர ஆட்டோ சங்க நிா்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்பட வேண்டும் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களிடம் இருந்து தனியார் வங்கி நிறுவனங்கள் கடன் வசூலிப்பதை தற்போது நிறுத்தி வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |