செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக ஒரு குட்டிக் கதை தான் இந்த செய்தியின் தொகுப்பு
பெரும்பான்மையான மாணவர்கள் முதல் பெஞ்சில் அமர்வதை விட கடைசி பெஞ்சில் அமர்வதை தான் மிகவும் விரும்புவர். வகுப்பறையிலேயே பின்னாடி போய் அமர்ந்தால் வாழ்க்கையிலும் பின்னுக்கு தான் போவாய் என்று ஆசிரியர்களிடையே நீங்களும் திட்டு வாங்கியதுண்டா? அப்பெடியென்றால் நானும் உங்களை போல் திட்டு வாங்கி வாழ்க்கையில் உயர்வு பெற்றுள்ளேன். இந்த கதையை பொறுத்தவரையில் ஆசிரியர் நினைத்தால் கடைசி பெஞ்ச் மாணவனையும் முதல் மாணவனாக வகுப்பின் முன்னணி மாணவனாக மாற்றமுடியும் என்ற கருத்தை உள்ளடக்கியது. இந்த கருத்தை உள் வாங்கிய படி கதைக்குள்ளே செல்லலாம் வாங்க.
ஒரு குக்கிராமத்தில் இருக்கக்கூடிய அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவருக்கு நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை விட கடைசி மதிப்பெண் எடுக்கும் மாணவன் முதல் மதிப்பெண் எடுக்க வைப்பதையே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வந்தவர். இவர் பணிபுரிந்த அரசுப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் இவரை பலமுறை கூப்பிட்டு நன்றாக படிக்கும் மாணவர்களிடையே கவனம் செலுத்தி அவர்களை மேலும் மேலும் மேம்படுத்தி நம் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நன்றாக படித்தால் என்ன நன்றாக படிக்காவிட்டால் என்ன அனைத்து மாணவர்களும் எனக்கு சமம்தான் அனைவருமே முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என்ற லட்சிய பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் அவரது வகுப்பில் சங்கர் என்ற மாணவனை உணக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் படிப்பே வராது என்று பலரும் திட்டி தீர்த்தனர். அந்த மாணவனை குறி வைத்து அவரை முதல் மாணவனாக மாற்ற நினைத்தார் ஆசிரியர் ரமேஷ்.
அதன்படி காலாண்டு தேர்வு முடிவில் வகுப்பறையில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அவர் நமது வகுப்பில் முதல் மாணவன் சங்கர் தான் என்று கூறினார். ஒரு நிமிடம் வகுப்பறையே திகைத்து போக கடைசி மதிப்பெண் எடுத்த முதல் மாணவன் என்று அவரை கூறினார். அனைவரும் சங்கரை பார்த்து நக்கலாக சிரித்தனர். பின் சங்கரை அழைத்து உன்னை அவமானப்படுத்துவதற்காக இவ்வாறு நான் கூறவில்லை உன்னை இந்த வகுப்பில் முதல் மாணவனாக ஆக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் இன்னும் மூன்று மாதங்களில் அரையாண்டுதேர்வு வந்து விடும் அதற்கு உன்னை ஆயத்தப்படுத்த நான் தயாராகி விட்டேன். நீ என்னுடைய ஒத்துழைப்புக்கு இணங்க செயல்பட்டால் கண்டிப்பாக நீயும் முதல் மாணவனாக வருவாய் என்று கூறினார்.
அதன்படி காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும். டிவி சினிமா மொபைல் உள்ளிட்டவற்றை உபயோகிக்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். விளையாட்டுடன் கூடிய படிப்பு, சுறுசுறுப்பு என பல்வேறு யுக்திகளை அவருக்கு சொல்லிக் கொடுத்தார். ஆசிரியர் சொல் பேச்சை தட்டாமல் மாணவன் செயல்பட அரையாண்டு தேர்வு நடைபெற்று வெளியிட்ட தேர்வில் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றார் சங்கர்.
இதையடுத்து அவரை அனைவரும் முன் அழைத்த ஆசிரியர் உங்களால் முடியாது என்று ஊர் சொல்லும் நம்பாதே உன்னை நம்பு உன்னால் முடியாது என்று எதுவுமில்லை என்று அதற்கு உதாரணம் ஷங்கர்தான் என்று கூற சக மாணவர்கள் சங்கரை கைகொடுத்து பாராட்டினர். ஆசிரியர் ரமேஷை போல என் மாணவனின் வெற்றியே எனக்கு சந்தோசம் என்று மாணவர்களோடு மாணவனாக அரும்பாடுபட்டு தினந்தோறும் உழைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..