ஊரடங்கின் விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் முக்கிய சாலையான வாடியார் வீதி, பேருந்து நிலையம் பின்புறங்களில் ஜவுளிக் கடைகளை திறந்து உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் 4 கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றின் 3 – வது அலை பரவல் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களின் குழந்தைகளை வெளியே அழைத்து வர வேண்டாம் என காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சீல் வைத்த கடையின் உரிமையாளர்கள் அபராத தொகையை 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும். இவ்வாறாக செலுத்தாவிட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு எச்சரித்துள்ளனர்.