ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சண்முகத்தை உடனடியாக இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சண்முகத்தின் மனைவி வையமுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.